ரஷ்யா மீதான தடைகள் என்ன? சற்று விரிவாக பார்க்கலாம்

Russia UkraineWar RussiaObstacles
By Thahir Feb 25, 2022 09:14 AM GMT
Report

அமெரிக்கா விதித்துள்ள தடைகள்

ரஷ்யாவுக்கு வெளியே உள்ள சொத்துக்கள் முடக்கப்படும் ரஷ்ய ராணுவ உபகரணங்களுக்கு பல்வேறு தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா தொழில்நுட்பத்துடன் தயாராகும் ஆயுதங்களை ரஷ்யா வாங்க முடியாது.

செமிகண்டக்டர்கள்,தொலைத்தொடர்பு சாதனங்கள் உள்ளிட்டவற்றை ரஷ்யாவிற்கு விற்க தடை தடைகள்.

ரஷ்யாவை பாதிக்க 15 நாட்கள் ஆகலாம் என அமெரிக்க அதிபர் பைடன் கருத்து.

பிரிட்டன் விதித்துள்ள தடைகள்

ரஷ்யாவின் 5 வங்கிகள் மற்றும் 3 கோடீஸ்வரர்களுக்கு பிரிட்டன் தடைகளை அறிவித்துள்ளது.

ரஷ்யாவுக்கு உயர் தொழில்நுட்ப ஏற்றுமதி தடை செய்யப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகள்

ரஷ்யாவில் உள்ள வங்கிகள் நிறுவனங்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடை.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உட்பட்ட வங்கிகளில் பரிவர்த்தனை,நிதியுதவி பெற முடியாது.

ஜெர்மனி அரசு விதிதுள்ள தடைகள் எரிவாயு குழாயான நார்டு ஸ்ட்ரீம்-2 விற்கு வழங்கிய ஒப்புதலை நிறுத்தி வைத்தது ஜெர்மனி.

ஜப்பான் விதித்துள்ள தடைகள்

ரஷ்ய நிறுவனங்கள்,வங்கிகளின் சொத்துகள் முடக்கம் செமிகண்டக்டர்கள் உள்ளிட்டவற்றை ரஷ்யாவின் ராணுவ அமைப்புகளுக்கு விற்க தடை.