ரஷ்யா விடுவித்த உக்ரைன் ராணுவ வீரர் - நெஞ்சம் ரணமாக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரல்

Russo-Ukrainian War
By Nandhini Sep 27, 2022 05:42 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ரஷ்யா விடுவித்த உக்ரைன் ராணுவ வீரரின் புகைப்படம் ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மைகாலியோ டியானாவ்

இந்நிலையில், ரஷ்யா பல ராணுவ வீரர்களை சிறைபிடித்தது. அவர்களை சமீபத்தில் ரஷ்யா விடுதலை செய்தது.

தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு ராணுவ வீரரின் 2 வெவ்வேறு புகைப்படங்கள் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மைகாலியோ டியானாவ் என்ற அந்த ராணுவ வீரர், கடந்த மே மாதம் மரியுபோல் போரில் சிறைபிடிக்கப்பட்டார். 4 மாதமாக ரஷ்ய சிறையில் சித்ரவதை அனுபவித்த பின்னர் கடந்த செப்டம்பர் 21ம் தேதி அவர் விடுவிக்கப்பட்டார்.

இவரை ரஷ்ய படை சிறைப்பிடிப்பதற்கு முன் எப்படி இருந்தார். விடுதலை ஆன பிறகு எப்படி இருக்கிறார் என்று அந்த புகைப்படம் தெள்ளத் தெளிவாக காட்டுகிறது. அவரது தோற்றம் இணையதளத்தில் பலரது மனதை நொறுக்கியுள்ளது.

உக்ரேனின் வெளியுறவு அமைச்சகத்தின் ஆலோசகரான அன்டன் ஜெராஷ்செங்கோ இது குறித்து கூறுகையில், அந்த ராணுவ வீரரின் ஒரு கையில் 4 சென்டிமீட்டர் அளவிற்கு எலும்பு இல்லை என்றார்.

தற்போது மைகாலியோ சிகிச்சைக்காக கீவ் நகரின் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலை மிக மோசமாக இருக்கிறது.     

russia-mykhailo-dianov-ukraine-russia-war