146 ஆண்டுகளுக்கு பின்.. சுரங்கம் தோண்டி வெளிவந்த மக்கள் - வைரல் வீடியோ
பனி மூடியதால் வீட்டுக்குள் இருக்கும் பலரும் சுரங்கம் தோண்டி வெளியே வந்துள்ளனர்.
பனிப்பொழிவு
ரஷ்யாவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் அதிகளவில் பனிப்பொழிவு இருக்கும். இந்நிலையில் தற்போது கம்சட்கா நகரில் பெய்த அதிகளவிலான பனிப்பொழிவால் அடுக்குமாடி குடியிருப்புகள் புதைந்துள்ளன.

பல இடங்களில் தரையில் இருந்து 2 மாடி கட்டடம் வரை பனிப்பொழிவு முழுவதுமாக மூடியுள்ளது. இதுதொடர்பான போட்டோக்கள், வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி பரவி வருகின்றன.
சிலர் தங்களின் வீட்டை சுற்றி சூழ்ந்த பனிக்கட்டிகளை இடித்து சுரங்கம் தோண்டி வெளியேறி வருகின்றன. வணிக நிறுவனங்கள், பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதா்ல அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இயல்பு நிலை பாதிப்பு
தற்போதைய சூழலில் 2 பேர் பலியாகி உள்ளனர். இவர்கள் வீடுகளின் மேல் குவிந்த பனிக்கட்டிகளை உடைத்து அகற்றினர். அப்போது பனிக்கட்டிகள் அவர்கள் மேல் விழுந்ததால் இருவரும் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

130 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு மக்கள் பனிப்புயலால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வளர்கள் தெரிவித்துள்ளனர். வடமேற்கு பசிபிக் பெருங்கடலின் விளிம்பு பகுதியாக உள்ள ஓகோட்ஸ்க் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதிகள் அதிகளவில் உருவாகின.
இது கடும் காற்று மற்றும் பனிப்பொழிவை கொண்டு வந்தது தான் இந்த பாதிப்புக்கு முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.