குழந்தைகளை 4 நாட்கள் வீட்டில் வைத்து பூட்டி விட்டு மது விருந்துக்கு சென்ற தாய் - பசியால் 11 மாத குழந்தை உயிரிழந்த சோகம்!

baby death russia mom
By Anupriyamkumaresan Jun 15, 2021 03:53 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in குற்றம்
Report

 ரஷ்யாவில் தாய் ஒருவர் 4 நாட்கள் வீட்டில் இரண்டு குழந்தைகளை பூட்டி வைத்து மது விருந்துக்கு சென்றதால் , பசியால் 11 மாத பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில், கணவனை பிரிந்து வாழும் 25 வயதான வோல்கா பஜிராவோ என்ற பெண், நண்பர்களுடன் மது விருந்தை அனுபவிக்க தனது 11 மாத மகனையும், 3 வயது மகளையும் வீட்டில் வைத்து பூட்டி விட்டு சென்றுள்ளார்.


4 நாட்களுக்கு பிறகு போதை தெளிந்தவுடன் வீட்டிற்கு வந்த வோல்கா, தனது 11 மாத குழந்தை பசியால் உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மேலும் , பசியால் பலவீனமடைந்து உயிருக்கு போராடிய நிலையில் இருந்த அவரது 3 வயது மகளை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தாயின் கடமையை செய்ய தவறியதற்காக, அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது அந்நாட்டு நீதிமன்றம்.