உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் ஏவுகணை தாக்குதல் - 34 பேர் படுகாயம், வீடுகள் சேதம்!

United Russia Russo-Ukrainian War Ukraine
By Vinothini May 01, 2023 11:15 AM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

ரஷ்யா மீண்டும் உக்ரைன் மீது ஏவுகணை அனுப்பி தாக்குதல் நடத்தியுள்ளது.

உக்ரைன் ரஷ்யா போர்

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையில் போர் தொடங்கியது. உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது, மேலும், உக்ரைன் மீது போர் தொடுத்தது.

russia-missile-attack-

இதனால் பல மக்கள் உயிரிழந்தனர். அந்த சமயத்தில் இந்த போர் பற்றி உலகம் முழுவதும் பேசப்பட்டது. தொடர்ந்து, ஓராண்டை கடந்து விட்ட நிலையிலும் இந்த சண்டை நீடித்து வருகிறது.

மீண்டும் தாக்குதல்

இந்நிலையில், மீண்டும் ரஷ்யா உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. உக்ரைனின் கிழக்கு நகரான பவ்லோஹார்ட் நகரத்தில் ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.

russia-missile-attack-

இந்த தாக்குதலில் 34 பேர் காயம் அடைந்துள்ளனர், மேலும் பல வீடுகள் சேதம் அடைந்துள்ளன.