உக்ரைன் மீதான போரை நிறுத்த நடவடிக்கை தேவை - பிரதமர் மோடி வலியுறுத்தல்..!
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தொடரந்து 37-வது நாளாக தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளும் ரஷ்யாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த போரில் இந்தியாவை தங்கள் பக்கம் கொண்டு வர அமெரிக்கா,ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் முயற்சித்து வருகின்றன.
இதனிடையே ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் 2 நாள் பயணமாக நேற்று இரவு இந்தியாவுக்கு வந்தார்.

அவரின் வருகை உலக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இன்று மாலை ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை சந்தித்து பேசினார் பிரதமர் நரேந்திர மோடி.சுமார் 40 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அந்த பேச்சுவார்த்தையின் போது பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் மீதான போரை நிறுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெர்சி லாவ்ரோவிடம் தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளின் மத்தியில் சமாதான முயற்சியில் இந்தியா அதன் பங்களிப்பை வழங்க தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.