உக்ரைனில் பொதுமக்களுக்கு பொதுவெளியில் மரண தண்டனை விதிக்க ரஷ்யா திட்டம் - அதிர்ச்சி தகவல்

russia ukraine Kharkiv RussianUkrainianWar
By Petchi Avudaiappan Mar 03, 2022 11:59 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் மக்களுக்கு  பொதுவெளியில் மரண தண்டனை நிறைவேற்ற ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா தொடர்ந்து 9வது நாளாக அங்கு போர் தொடுத்து வருகிறது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருவதால் இருதரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் போரை நிறுத்த சொல்லி உலக நாடுகளும் வலியுறுத்து வருகின்றன.

அந்த வகையில் உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷ்ய படைகளை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.   இதற்கிடையில் போரை முடிவுக்கு கொண்டுவர உக்ரைன் - ரஷ்யா இடையே பெலாரஸ் நாட்டில் நடந்த 2 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. 

இதனிடையே ரஷ்யாவால் உக்ரைனில் கைப்பற்றப்பட்ட நகரங்களில் பொதுமக்கள் ரஷ்ய அரசுக்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை பொதுவெளியில் தூக்கிலிட அல்லது சுட்டுக்கொல்ல ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது மக்களின் மன உறுதியை சிதைக்க பொதுவெளியில் மக்களை தூக்கிலிட ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக ஐரோப்பிய உளவு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் உக்ரைனில் உச்சக்கட்ட பதற்றம் நிலவுகிறது.