ஏரியில் மிதக்கும் சுற்றுலா பயணிகளின் உடல்கள்- மீட்பு பணியில் இறங்கிய மீட்பு குழுவினர்

Russia Helicopter Crash
By Thahir Aug 14, 2021 06:30 AM GMT
Report

ரஷ்யாவில் ஹெலிகாப்டர் ஒன்று ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலரும் இறந்திருக்கலாம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவில் mi-8 என்னும் ஹெலிகாப்டர் ஒன்று பயணிகள் 16 பேரை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது.

இந்நிலையில் ஹெலிகாப்டர் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் ரஷ்யாவிலுள்ள ஹம்சட்கா என்னும் பகுதியில் அமைந்துள்ள குரில் ஏரியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏரியில் மிதக்கும் சுற்றுலா பயணிகளின்  உடல்கள்- மீட்பு பணியில் இறங்கிய மீட்பு குழுவினர் | Russia Helicopter Crash

இந்த விபத்தில் சிக்கிய சுமார் 8 பேரை மீட்புக்குழுவினர்கள் மீட்டுள்ளனர். இதில் 4 பேர் எந்தவித காயமுமின்றி நலமுடன் உள்ளார்கள்.

இவ்வாறான சூழ்நிலையில் ஹெலிகாப்டர் விழுந்த அந்த ஏரியில் அதிகமான சுற்றுலா பயணிகளின் உடல்களும் இறந்த நிலையில் மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த மீட்புக்குழுவினர்.

ஏரியில் மிதக்கும் மற்ற உடல்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டு வருவதாக ரஷ்ய நாட்டின் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது.