ஃபேஸ்புக், இன்ஸ்டாவை தீவிரவாத அமைப்புகளில் சேர்த்த ரஷ்யா - பின்னணி என்ன
மார்க் ஜுக்கர்பெர்க்கிற்குச் சொந்தமான சமூக ஊடகதளம் மெட்டாவை, ரஷ்யா தீவிரவாத அமைப்புகளில் சேர்த்துள்ளது.
மெட்டா
ரஷ்ய அரசு கடந்த மார்ச் மாதத்திலேயே, தங்கள் நாட்டுக்கு எதிராக அவதூறு செய்திகள் பரப்புவதாக, 'Fake News Law' எனும் சட்டத்தை அமல்படுத்தி, ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களுக்குத் தடைவிதித்தது.
இந்நிலையில், சமூக ஊடக நிறுவனமான மெட்டாவை பயங்கரவாத மற்றும் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் ரஷ்யா சேர்த்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. மேலும், உக்ரைனிலுள்ள சமூக ஊடகப் பயனர்கள் ரஷ்யர்களுக்கு எதிரான வன்முறையை ஊக்குவிக்கும் உள்ளடக்கத்தைப் பதிவிட அனுமதிப்பதாகக் கூறி,
தீவிரவாத அமைப்பு
மார்க் ஜுக்கர்பெர்க்கிற்குச் சொந்தமான சமூக ஊடகதளம் மெட்டா, தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக மாஸ்கோ நீதிமன்றம் குற்றம்சாட்டியிருக்கிறது. ஆனால், மாஸ்கோ நீதிமன்றத்தின் இந்தக் குற்றச்சாட்டை நிராகரித்த மெட்டா தரப்பு வழக்கறிஞர்,
``இந்த அமைப்பு ஒருபோதும் தீவிரவாத செயல்களில் ஈடுபடவில்லை. மேலும் இந்த அமைப்பு, ரஷ்யாமீது தீவிரமான மற்றும் பகுத்தறிவற்ற வெறுப்பு எனக் கூறப்படும் ரஸ்ஸோபோபியாவுக்கு எதிரானது" எனக் கூறியதாகச் சொல்லப்படுகிறது.