ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு சென்ற ரஷ்யா - உக்ரைனுடனான போரில் திடீர் திருப்பம்
உக்ரைனுடனான போர் அணு ஆயுத போராக வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா புகார் ஒன்றை அளித்துள்ளது.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா கடந்த 2 வாரங்களாக அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. இதனால் இருதரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள், பொருளாதார சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த தாக்குதலில் உக்ரைன் மக்கள் 20 ஆயிரம் பேரும், ரஷ்ய படையினர் 15 ஆயிரம் பேரும் பலியாகிவிட்டதாக கூறப்படுகிறது. அதேசமயம் போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே மூன்றாவது கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வில் முடிந்தது.

இதனிடையே தங்களது எல்லையில் இருக்கும் உக்ரைன் பகுதிகளில் அமெரிக்கா ஆதரவுடன் பயோ ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக ரஷ்யா தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறது. இதற்கான ஆராய்ச்சியில் அமெரிக்காவின் பென்டகன் உதவியுடன் உக்ரைன் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயோ ஆயுதங்கள் என்பது ஒரு நாட்டின் மீது நேரடியாக ஆயுதங்களை வைத்து போர் தொடுக்காமல், நோய்களை பரவ செய்து போர் தொடுக்கும் முறையை போன்றது என்பதால் ரஷ்யாவிடையே இந்த தகவல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யாவின் குற்றச்சாட்டில் பறவைகள், பல்வேறு வைரஸ்களை கொண்ட விலங்குகளை ஆராய்ச்சி செய்து அதில் இருந்து வைரஸ்களை எடுத்து உக்ரைன் பரப்புவதற்கு திட்டமிட்டு வருகிறார்கள் என்று கூறியுள்ளது. இதனை அமெரிக்காவும், உக்ரைனும் மறுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் பயோ ஆயுதங்கள் குறித்து ரஷ்யா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் புகார் அளித்துள்ளது. இது தொடர்பாக அவசர ஆலோசனை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.