உக்ரைனில் 36 ஏவுகணைகளை கொண்டு ரஷ்யா சராமரியாக தாக்குதல் - அலறிய மக்கள்...!
உக்ரைனை குறிவைத்து ரஷ்யா இன்று 36 ஏவுகணைகளை கொண்டு சரமாரியாக தாக்கித் தள்ளியது.
36 ஏவுகணைகளால் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல்
இந்த தாக்குதல், உக்ரைனின் வான் பாதுகாப்பு பேட்டரிகள் 16 ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியது. இத்தாக்குதலில், 79 வயதான பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 7 பேர் படுகாயமடைந்தனர்.
இத்தாக்குதலைக் கண்டு உக்ரைன் மக்கள் அலறி துடித்தனர்.
உக்ரைன் துணை பாதுகாப்பு மந்திரி ஹன்னா மல்யார் கூறுகையில்,
ரஷ்யாவின் ஏவுகணைகள் உக்ரைன் நாட்டை நாலாபுறமும் தாக்குதல் நடத்துகிறது. இத்தாக்குதலில் 7 வீடுகள் தரைமட்டமாயின. 30 வீடுகள் சேதமடைந்துள்ளன.
ஒரு தொழிற்சாலை ஆலை தீப்பிடித்து எரிந்தது. உக்ரேனியப் படைகள் பின்வாங்கியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு நேற்று தெரிவித்தது.
உக்ரேனிய துருப்புக்கள் முன்னர் ஆக்கிரமிக்கப்பட்ட கோடுகளிலிருந்து 3 கிலோமீட்டர் தூரத்திற்கு தோராயமாக பின்வாங்கின. ரஷ்ய படைகள் அரசாங்க நிலைகள் மீது 24 மணி நேரமும் தாக்குதல்களை நடத்தி வருகின்றன என்றார்.
