செர்னோபில் அணுஉலை மீது ரஷ்யா தாக்குதல் - பதற்றத்தில் உக்ரைன்

Donald Trump Volodymyr Zelenskyy Russo-Ukrainian War Ukraine Russia
By Karthikraja Feb 14, 2025 10:56 AM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

 செர்னோபில் அணுஉலை மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.

ரஷ்யா உக்ரைன் போர்

நேட்டோவில் உக்ரைன் இணையக்கூடாது என்பதற்காக, கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்யா, உக்ரைன் மீது போரை தொடங்கியது. 1,000 நாட்களை கடந்தும் போர் நீடித்து வருகிறது. 

ரஷ்யா உக்ரைன் போர்

இந்நிலையில் புதிதாக அமெரிக்கா அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வருவேன் என அறிவித்தார்.

போர் நிறுத்த முயற்சி

இதை தொடர்ந்து தொலைபேசி மூலம் ரஷ்யா அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் உரையாடிய டிரம்ப், இருவரும் போர் நிறுத்தத்தை விரும்புவதாக அறிவித்தார். 

ரஷ்யா உக்ரைன் அமைதிப் பேச்சுவார்த்தை

இதனை தொடர்ந்து ஜெர்மனியின் முனிச் நகரில் அமெரிக்கா துணை அதிபர் ஜெ.டி.வான்ஸ் தலைமையில் இன்று(14.02.2025) அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும், இந்தக் கூட்டத்தில் சாதகமான முடிவு எட்டப்படும் என்றும் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

செர்னோபில் அணுஉலை

இதனிடையே ரஷ்யா ராணுவம் உக்ரைனில் உள்ள செர்னோபில் அணுஉலை(chernobyl nuclear plant) மீது பயங்கர வெடிபொருட்களுடன் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் அணு உலை மீதான கவசம் சேதமடைந்துள்ளதாகவும், தற்போது வரை, கதிர்வீச்சு அளவுகள் அதிகரிக்கவில்லை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார். 

ஏப்ரல் 26, 1986 அன்று செர்னோபில் அணுஉலை வெடித்து வரலாற்றில் மிக மோசமான அணு விபத்தாக மாறியது. இந்நிகழ்வின் போது ஏற்பட்ட வெடிப்பினால் 30 பேர் இறந்தனர். இவ்விபத்தினால் கேன்சர் போன்ற பின்விளைவுகளினால் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.

20 டன் அளவிலான கதிர்வீச்சு நிறைந்த அணுக்கழிவு, 30 டன் அளவிலான கதிர்வீச்சு நிரம்பிய துகள்கள், அந்தப் பகுதி முழுதும் பல மைல் தூரத்திற்கு சிதறடிக்கப்பட்டது. 3,35,000 மக்களை அங்கிருந்து வெளியேற்றி, அணு உலையைச் சுற்றிய 35 கிமீட்டர் அகலமான எல்லையை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்தது.