உக்ரைன்-ரஷ்யா போர் - பயங்கர சத்தத்துடன் வெடிக்கும் குண்டுகள்
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்ட நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு துறைமுக பகுதிகளில் சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்துள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் எல்லையில் படைகளை வாபஸ் பெற்று வருவதாக ரஷ்யா கூறுவதை நம்ப முடியாது என அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் தெரிவித்துள்ளன.
ரஷ்யா உக்ரைன் இடையே தற்போது போர் பதற்றம் நிலவி வருகிறது . உக்ரைனின் 3 எல்லைகளிலும் சுற்றிவளைத்து 1லட்சத்திற்கும் அதிகமான வீரர்களையும், ஆயுதங்களையும் குவித்துள்ளது ரஷ்யா.
ரஷ்யாவின் இந்த செயலுக்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன எந்த நேரத்திலும் ரஷ்யா போர்தொடுக்கலாம் என உக்ரைன் கூறி வந்த நிலையில்,
உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் அவரின் உத்தரவை அடுத்து கீவ் மற்றும் கிழக்கு துறைமுக பகுதிகளில் குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் கூறியதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.