உக்ரைன் மீதான் போர் நிறுத்தப்படுவதாக ரஷ்யா அதிரடி அறிவிப்பு - மீட்பு பணிகள் நடப்பதில் சிக்கல்

india ukraine pmmodi UkraineRussianWar UkraineUnderAttaсk
By Petchi Avudaiappan Mar 05, 2022 06:59 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in உலகம்
Report

உக்ரைனில் 2 நகரங்களில் நடந்து வரும்  போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. 

நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா தொடர்ந்து 10வது நாளாக அங்கு போர் தொடுத்து வருகிறது. இந்த தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருவதால் இருதரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் போரை நிறுத்த சொல்லி உலக நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. 

உக்ரைன் மீதான் போர் நிறுத்தப்படுவதாக ரஷ்யா அதிரடி அறிவிப்பு - மீட்பு பணிகள் நடப்பதில் சிக்கல் | Russia Declares Ceasefire In Ukraine

இந்நிலையில் ரஷ்யா உக்ரைனில் உள்ள மரியபோல், வோல்னோவாக்கா ஆகிய 2 நகரங்களில் நடந்து வரும் போரை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தப்படுவதாகவும், உக்ரைனில் சிக்கியுள்ளவர்களை வெளியேற்றும் பணிக்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இந்திய நேரப்படி இன்று காலை 11.30 மணி முதல் இந்த போர் நிறுத்தம் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்களை மீட்கும் பணிக்காக  இந்தியா போர் நிறுத்தம் செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.