மருத்துவ சேவை நாயகர் ஏ.சி.சண்முகம் அவர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் ரஷ்யா

Tamil nadu
By Thahir Feb 07, 2023 04:00 AM GMT
Report

மக்கள் சேவகரும் டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலை கழகத்தின் நிறுவனருமான ஏ.சி.சண்முகம் அவர்களுக்கு  ரஷ்யாவில் உள்ள கர்ஸ்க் ( Kursk) மாநில மருத்துவ பல்கலைகழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்க உள்ளது.

ஏ.சி.சண்முகத்தை கௌரவிக்கும் ரஷ்யா 

ரஷ்யாவில் உள்ள பழமை வாய்ந்த கர்ஸ்க் ( Kursk) மாநில மருத்துவ பல்கலைக்கழத்தில் 88வது ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது.

இதையடுத்து மருத்துவம் சார்ந்த பெது பணியில் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பொருளாதாரத்தில் மிகவும் நலிந்த மக்களுக்கு இலவச மருத்துவம் அளித்ததை பாராட்டி ஏ.சி.சண்முகம் அவர்களுக்கு இங்கிலாந்து நாட்டிலுள்ள 400 ஆண்டு பழமைவாய்ந்த ராயல் காலேஜ் ஆப் பிசிஷியன்ஸ் மற்றும் சர்ஜன்கள் (FRCPS) எனும் உயரிய கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்ததை தொடர்ந்து ரஷ்யாவில் உள்ள கர்ஸ்க் மாநில மருத்துவ பல்கலை கழகம் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது.

russia-confers-honorary-doctorate-on-a-c-shanmugam

இதையடுத்து கர்ஸ்க் (Kursk) மாநில மருத்துவ பல்கலைகழகம் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கி கௌரவிக்க உள்ளது.

நிகழ்ச்சி நிரல் 

ரஷ்யா நாட்டிற்கு செல்லும் ஏ.சி.சண்முகம் அவர்கள் கர்ஸ்க் ( Kursk) பிராந்திய பாராளுமன்ற அறையில் சிறப்புரை ஆற்றுகிறார்.

நாசிக்களின் தாக்குதலிலிருந்து கர்ஸ்க் ( Kursk)மாநிலம் விடுதலைபெற்ற 80வது ஆண்டு நினைவுச் சின்னத்தை திறந்து வைக்கிறார்.

கர்ஸ்க் ( Kursk) மாநில மருத்துவ மல்கலைகழகத்தின் 88வது ஆண்டு விழா கலை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முக்கிய உரையாற்றுகிறார்.

மேலும் கர்ஸ்க் ( Kursk) மாநில மருத்துவ பல்கலைக்கழகமும் டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் இணைந்து ஆராய்ச்சி மற்றும் மாணவர்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் பரிமாற்றத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். கர்ஸ்க் ( Kursk) மாநில கல்வியாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.