மனிதனை உயிருடன் சவப்பெட்டியில் புதைக்கும் நிறுவனம் - ரஷ்யாவில் வினோத சிகிச்சை...!
United Russia
By Nandhini
சவப்பெட்டியில் புதைக்கும் வினோத சிகிச்சை
ரஷ்யாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம், மனிதனை 1 மணி நேரம் உயிருடன் சவப்பெட்டியில் புதைக்கும் வினோத சிகிச்சை மேற்கொண்டு வருகிறது.
ரஷ்யாவைச் சேர்ந்த ப்ரிகேட் அகாடமி என்ற நிறுவனம் ஒரு வினோத சிகிச்சை முறையை மேற்கொள்கிறது.
இந்நிறுவனம் மக்களின் பயத்தை போக்குவதற்காக ‘Psychic Therapy’ என்ற பெயரில் ஒரு சிகிச்சையாக வழங்கி வருகிறது.
அந்த சிகிச்சையில், சுமார் 1 மணி நேரம் மனிதனை உயிருடன் சவப்பெட்டியில் வைத்து மண்ணில் புதைக்கிறது.
இது குறித்து ப்ரிகேட் அகாடமி தெரிவிக்கையில், இந்த சிகிச்சை தக்க பாதுகாப்பான முறையில் நடத்தப்படுகிறது. இதற்கு ரூ.47 லட்சம் வசூல் செய்கிறோம் என்று தெரிவித்துள்ளது.
