உக்ரைனின் மிக முக்கியமான நகரத்தை கைப்பற்றிய ரஷ்யா..!
உக்ரைனினில் மேலும் ஒரு முக்கிய நகரத்தை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
நீடிக்கும் போர்
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022 ஆம் ஆண்டு போரை தொடங்கியது. ஒரு ஆண்டுக்கும் மேலாக இந்த இரு நாட்டுக்குமான மோதல் நீடித்து வருகிறது.
இதில் உக்ரைனின் சில நகரங்களை ரஷ்யா ராணுவம் கைப்பற்றியது. இருந்த போதும் உக்ரைன் ராணுவமும் ரஷ்யாவிற்கு கடும் சவாலாக இருந்து வருகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் நிலவி வருகிறது. இதனிடையே உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் கிழக்கு உக்ரைனில் உள்ள முக்கிய நகரமான பக்முத் கைப்பற்ற ரஷ்ய படைகள் சில மாதங்களாக கடும் மோதலில் ஈடுபட்டு வருகிறது.
முக்கிய நகரத்தை கைப்பற்றிய ரஷ்யா
இதில் ரஷ்யா தனியார் படையான வாக்னர் குழுவினர் ஈடுபட்டனர். அவர்களை எதிர்த்து உக்ரைன் ராணுவம் கடுமையாக போர் புரிந்தது.
சில நாட்களுக்கு முன்பு பக்முத் நகரின் பெரும்பாலான பகுதியை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக ரஷ்யா அறிவித்தது. விரைவில் அந்நகரை கைப்பற்றுவோம் என்று தெரிவித்தது.
இந்த நிலையில் பக்முத் நகரை முழுமையாக கைப்பற்றிவிட்டதாக ரஷ்யாவின் வாக்னர் குழுவின் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஷின் தெரிவித்துள்ளார்.உக்ரைனின் முக்கிய நகரை கைப்பற்றியதை அறிந்து ரஷ்ய அதிபர் புடின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.