ரஷ்ய தலைநகரின் மிக மோசமான நிலை: முதன்முறையாக ஒப்புக்கொண்ட மேயர்

corona news paper
By Jon Feb 03, 2021 05:06 PM GMT
Report

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், மொத்தமுள்ள மக்கள்தொகையில் பாதிக்கும் மேலானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நகர மேயர் முதல்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

ரஷ்ய அரசு இதுவரை வெளியிட்டுள்ள கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட இது 6 மடங்கு அதிகம் என கூறப்படுகிறது. உள்ளூர் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்த மாஸ்கோ நகர மேயர் செர்ஜி சோபியானின், இதில் 1 சதவீதம் பேர்களுக்கு கொரோனா பாதிப்பு இரண்டாவது முறை ஏற்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரஷ்ய தலைநகரின் மிக மோசமான நிலை: முதன்முறையாக ஒப்புக்கொண்ட மேயர் | Russia Capital Moscow Covid

திங்களன்று ரஷ்யாவில் மொத்தம் 437 பேர்கள் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர். ஒரே நாளில் 17,648 பேர்களுக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,868,087 எனவும் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 73,619 எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய தலைநகரின் மிக மோசமான நிலை: முதன்முறையாக ஒப்புக்கொண்ட மேயர் | Russia Capital Moscow Covid

இந்த நிலையிலேயே மாஸ்கோ நகரில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கான தற்காலிக மருத்துவமனை தொடர்பில் புகைப்படங்கள் வெளியாகி பலரது கவனதையும் ஈர்த்தது.

குறித்த மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதிகளுடன் 1,300 படுக்கைகளும் 100கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். சீனாவின் பாரம்பரிய நோயெதிர்ப்பு உடற்பயிற்சிகளை ரஷ்ய மருத்துவர்கள் தற்போது நோயாளிகளுக்கு பயிற்றுவிப்பதாக தெரிய வந்துள்ளது.



Gallery