ஒலிம்பிக்கில் ரஷ்யாவுக்கு தடை: விழி பிதுங்கும் 337 வீரர்கள்

Russia Tokyo Olympics 2021 Russian flag
By Petchi Avudaiappan Jul 25, 2021 09:45 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in விளையாட்டு
Report

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ரஷ்ய நாட்டு வீரர்கள் அந்நாட்டு கொடி இல்லாமல் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஜூன் 25 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. இதன் அணிவகுப்பில் பங்கேற்ற ரஷ்யா ஒலிம்பிக் சங்கத்தின் கொடியை ஏந்தி சென்றனர். ஊக்கமருந்து தொடர்பான அறிக்கையில் முறைகேடு செய்ததாக ரஷ்யா முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டதால் அடுத்த 4 ஆண்டுகளுக்கு எந்த ஒரு சர்வதேச விளையாட்டு போட்டிகளிலும் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டது.

தற்போதைய டோக்கியோ ஒலிம்பிக், 2022-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டி உள்ளிட்டவற்றில் ரஷ்யா பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால் தனிப்பட்ட முறையில் ஊக்கமருந்து சோதனையில் தேர்ச்சி அடையும் பட்சத்தில், ஒலிம்பிக் கொடியின் கீழ் பங்கேற்க ரஷ்ய வீரர்களுக்கு அனுமதி வழங்கப்படும் எனவும், அப்போட்டிகளின் போது ரஷ்ய நாட்டுக் கொடி மற்றும் தேசிய கீதத்திற்கும் அனுமதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டது.

ஒலிம்பிக்கில் ரஷ்யாவுக்கு தடை: விழி பிதுங்கும் 337 வீரர்கள் | Russia Called Roc At The Tokyo Olympics

வீரர்கள், வீராங்கனைகளின் நலன் கருதி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றாலும் வெல்லும் பதக்கங்கள் ரஷ்ய நாட்டின் கணக்கில் வராது. கடந்தமுறை பிரேசிலில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் ரஷ்யா 19 தங்கம், 37 வெள்ளி, 38 வெண்கலம் என மொத்தம் 56 பதக்கங்களை வென்று பதக்கப்பட்டியலில் 4வது இடத்தை பிடித்த நிலையில் இந்த முறை சோதனைக் காலமாக அமைந்துவிட்டது.

இந்த முறை குழு ஆட்டங்களிலும்,தடகளம், குத்துச்சண்டை, வாள் வீச்சு, ஜிம்னாஸ்டிக் என தனிநபர் பிரிவுகளிலும் மொத்தம் 337 ரஷ்யர்கள் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.