ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பிரதமர்கள் ரஷ்யாவுக்குள் நுழைய தடை விதிப்பு
கடந்த பிப்ரவரி 24-ந் தேதி உக்ரைன் மீது போரை தொடுத்த ரஷ்யா 40 நாட்களுக்கும் மேலாக அந்நாட்டு மீது கொடூர தாக்குதல்களை நடத்தி வருகிறது.
உக்ரைனின் பல்வேறு நகரங்கள் பேரழிவை சந்துத்துள்ளது. இரு நாடுகளுக்குமிடையே நடந்து வரும் இந்த கடுமையான போரால் அப்பாவி மக்கள் உயிரிழந்து வருகின்றனர்.
ஐ.நா உள்பட பல்வேறு நாடுகளும், அமைப்புகளும் ரஷ்யாவின் இத்தகைய போக்கிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். உக்ரைனுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டிருக்கும் இந்த போரை நிறுத்தவேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்திய போதிலும் எதற்கும் செவி சாய்க்காத ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி தான் வருகிறது.
மேலும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்து. அதேபோல் ரஷ்யாவிற்கு எதிராக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அரசும் சில நடவடிக்கைகளை மேற்கொண்டதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தது.

இதனை அடுத்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் ஆகியோர் ரஷ்யாவுக்குள் நுழைய ரஷ்யா தடை விதித்துள்ளது.

மேலும், 228 ஆஸ்திரேலியா சட்டம் இயற்றுபவர்கள் மற்றும் 130 நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்கள் ரஷ்யாவிற்கு நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்காலத்தில், ஆஸ்திரேலிய இராணுவம், வணிகர்கள், வல்லுநர்கள் மற்றும் ரஷ்யாவை பற்றி எதிர்மறையான அணுகுமுறையைத் தூண்டுவதற்கு உதவும் பத்திரிகையாளர்களை உள்ளடக்கிய பொருளாதாரத் தடைகளை குறித்த புதிய அறிவிப்புகள் 'கருப்புப் பட்டியலில்' வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.