ரஷ்ய மக்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு - அதிபர் புதினின் நடவடிக்கையால் அதிருப்தி
ரஷ்யா மீது உலக நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ள நிலையில் அந்நாட்டு மக்களுக்கு அதிரடி உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 6வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகின்றனர். அதேசமயம் உலக நாடுகள் பலவும் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இதற்கிடையில் ரஷ்யா- உக்ரைன் இடையே அமைதி பேச்சுவார்த்தையின் முதற்சுற்று நடந்து முடிந்துள்ளது.
ரஷ்யா மீதான பொருளாதார தடை நடவடிக்கையால் வெளிநாடுகளில் உள்ள ரஷ்ய சொத்துக்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. அதேபோல் ஒரு நாட்டின் எல்லை தாண்டி நடைபெறும் பண பரிவர்த்தனையை சுமூகமாக நடைமுறைப்படுத்த உலகளாவிய வங்கிகளுக்கு இடையேயான நிதி தொலைத்தொடர்புகளுக்கான சமூகம் என்ற ஷிப்ட் அமைப்பில் இருந்தும் ரஷ்யா நீக்கப்பட்டுள்ளது.
இத்தகைய பொருளாதார ரீதியிலான நடவடிக்கைகளால் ரஷ்யா பெரும் பொருளாதார சிக்கலை சந்தித்துள்ளது. அதாவது அமெரிக்க டாலருக்கு நிகரான ரஷிய ருபெலின் மதிப்பு பெரும் சரிவை சந்தித்துள்ளதால் ரஷ்யாவின் தேசிய வங்கி வட்டி விகிதத்தை 20 சதவீதமாக அதிகரித்துள்ளது.
மேலும் ரஷ்யாவின் சரிந்த பொருளாதாரத்தை மீட்க ரஷ்யர்கள் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்ப தடை அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. அதேசமயம் ஏற்றுமதியாளர்கள் பொருட்களை ருபெலில் வாங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.