ஸ்பெயின் பிரதமர் உக்ரைன் சென்ற நிலையில் ரஷ்யா குண்டுவீச்சு - 3 பேர் பலி!

Ukraine Russia
By Vinothini Jul 02, 2023 10:20 AM GMT
Report

ரஷ்யா மீண்டும் உக்ரைன் மீது போரை தீவிரப்படுத்தியதால் மக்கள் பதற்றத்தில் உள்ளனர்.

போர்

உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது, உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷிய படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். அவர்களை வெளியேற்றுவதற்காக உக்ரைன் படைகள் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றன.

russia-attacks-ukraine-3-were-dead

உக்ரைனுக்கு மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து நிதியுதவியும், ஆயுத உதவியும் வழங்குகின்றன. உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், உக்ரைனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

தாக்குதல்

இந்நிலையில், ஸ்பெயின் பிரதமர் உக்ரைன் மீதான ரஷியாவின் சட்டவிரோத மற்றும் நியாயமற்ற ஆக்கிரமிப்புக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் மற்றும் ஐரோப்பாவின் உறுதியான ஆதரவை தெரிவிக்கவே வந்திருப்பதாக கூறினார்.

russia-attacks-ukraine-3-were-dead

இச்சமயத்தில் கிழக்கு பிராந்தியான டொனெட்ஸ்க் பிராந்தியத்தில் ரஷிய படைகள் ஷெல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பொதுமக்கள் 3 பேர் உயிரிழந்தனர், மேலும் 17 பேர் காயமடைந்துள்னர்.