உக்ரைன் மீது ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல் - அதிர்ச்சியில் மக்கள்...!

United Russia Ukraine
By Nandhini Feb 10, 2023 02:08 PM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

இன்று உக்ரைன் மீது ரஷ்யாவின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உக்ரைன் மீது ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்

இன்று அசோவ் கடலிலிருந்து ஈரானில் தயாரிக்கப்பட்ட ஏழு "காமிகேஸ்" ட்ரோன்களையும், கருங்கடலிலிருந்து ஆறு கலிப்ர் கப்பல் ஏவுகணைகளையும் உக்ரைனைத் தாக்க ரஷ்யா ஏவியது.

இந்நிலையில், ரஷ்யா, உக்ரைனில் 5 ஆளில்லா விமானங்கள் மற்றும் 5 காலிபர் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் கார்கிவ் பகுதியில் உள்ள முக்கியமான மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை குறிவைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது.

சுமார் 35 விமானங்கள் ஏவுகணைகளை ஏவியுள்ளது. இத்தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருந்தாலும், மின் உற்பத்தி நிலையங்களுக்கு கடுமையாக சேதமைடைந்துள்ளதால், மின்சாரம் தடைபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

russia-attack-on-ukraine