‘’ சமாதானம் பேச அழைத்த ரஷ்யா ‘’அழைப்பை நிராகரித்தது உக்ரைன் காரணம் என்ன?

Russia RussiaUkraineConflict
By Irumporai Feb 27, 2022 08:15 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

 உக்ரைனுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயார் என ரஷ்ய அதிபர் புதின் அறிவித்திருந்த நிலையில் பேச்சுவார்த்தை நடத்த உகரைன் மறுத்துள்ளது.

ரஷ்யா ராணுவ படை உக்ரைனை சுற்றிவளைத்து கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. பெரிய பலத்தை கொண்டுள்ள ரஷ்ய படைக்கள் தாக்குதலுக்கு, உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

உக்ரைனின் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதிக்குள் ரஷ்ய துருப்புக்கள் மற்றும் ராணுவ வாகனங்கள் நுழைந்து, அந்நகரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

உக்ரைன் மீது குண்டு மழை பொழிந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி வரும் ரஷியா, உக்ரைனுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு தயார் என தெரிவித்துள்ளது. பெலாரஸில் பேச்சுவார்த்தைக்கு நடத்தலாம் எனவும் தங்கள் நாட்டின் பிரதிநிதிகள் தயார் நிலையில் உள்ளதாகவும் ரஷியா தெரிவித்துள்ளது

இந்த நிலையில் ரஷ்யாவின் இந்த அறிவிப்பிற்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மறுப்பு தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தும் நிலையில் பெலாரஸில், பேச்சுவார்த்தை நடத்த முடியாது எனவும்.

வார்சா(போலந்து), இஸ்தான்புல்(துருக்கி), பாகு(அஜர்பைஜான்)"  இந்த நகரங்களை பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யாவுக்கு பரிந்துரைத்திருந்தோம்.