போருக்கு மத்தியில் ரஷ்யா செல்லும் சீன அதிபர் : வெளியான பரபரப்பு தகவல்
சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, இதற்காக அடுத்த வாரம் ரஷ்ய செல்ல உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
உக்ரைன் ரஷ்யா போர்
உக்ரைன் ரஷ்யா போர் ஒரு வருடங்களை கடந்துள்ள நிலையில் ரஷ்யாவுக்கு ஆயுதங்களை வழங்க சீனா முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம் சாட்டும் நிலையில் தற்போது சீன அதிபர் ரஷ்யா செல்ல உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீன அதிபர் சந்திப்பு
கடந்த மாதம் சீன அமைச்சர் வாங் யீங் ரஷ்யா சென்ற போது மாஸ்கோவில் அவருக்கு சிறப்பு விருந்து கொடுத்தார். அப்போது சீன அதிபர் ஜின்பிங்கிற்கு மறைமுகமாக அழைப்பு விடுத்த நிலையில் ரஷ்யாவுக்கு முதன் முறையாக சீன அதிபர் பயணம் மேற்கொள்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதினுடனான இந்த சந்திப்பு ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்துள்ள போரை நிறுத்துவதற்கான, அமைதி நடவடிக்கைக்கு உதவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது