கடற்கரையில் யோகா செய்த நடிகை - ராட்சத அலையால் காதலன் கண்முன்னே பரிதாப பலி

Thailand Death Actress Russia
By Karthikraja Dec 03, 2024 08:00 AM GMT
Karthikraja

Karthikraja

in உலகம்
Report

 கடற்கரையில் யோகா செய்த நடிகை ராட்சத அலையால் உயிரிழந்துள்ளார்.

ரஷ்ய நடிகை

ரஷ்ய நடிகை கமிலா பெல்யாட்ஸ்காயா, விடுமுறையைக் கொண்டாட தனது காதலனுடன் தாய்லாந்து சென்றிருந்தார். 

russian actress swept away in thailand

அங்குள்ள கோ சாமுய் கடற்கரையில், உள்ள லாட் கோ வியூ பாயின்ட்டுக்கு சென்று யோகா செய்து அதை விடியோவாகவும் எடுத்துள்ளார்.

ராட்சத அலை

மேலும், அந்த இடம் குறித்து பேசிய அவர், "இந்த இடம், இந்த பாறை கடற்கரை என் வாழ்வில் நான் பார்த்த சிறந்த விஷயம். நான் இப்போது இங்கு இருப்பதற்கு நன்றி. நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்" என தெரிவித்துள்ளார். 

இந்த சூழலில் அவர் யோகா செய்து கொண்டிருக்கும் போது ராட்சத அலை எழும்பி அவரை கடலுக்குள் இழுத்து சென்றது. அருகில் இருந்த அவரது காதலர் காப்பாற்ற முயன்ற போதும் அவரால் காப்பாற்ற முடியவில்லை. 

அதன் பிறகு கடல் அலை அடித்துச் செல்லப்பட்ட இடத்திலிருந்து சில கிலோமீட்டர் தொலைவில் அவரது உடல் மீட்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.