தீவிரவாதத்தை ஆதரிக்கும் ரஷ்யா - ஐரோப்பிய நாடாளுமன்றம் பகீர் குற்றச்சாட்டு!
ரஷ்யா தீவிரவாதத்தை ஆதரிப்பதாக ஐரோப்பிய நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ரஷ்யா
உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் தற்போது வரை முடிந்தபாடில்லை. இதனால், 4.6 மில்லியன் மக்களுக்கும் மேல் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

பல பொருட்களின் உற்பத்தியினை குறைத்துள்ளது. ஏற்கனவே கோதுமை, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்ட பல பொருட்களின் விலையானது பலத்த உச்சம் தொட்டுள்ளது. ஆனால், அதனையெல்லாம் சிறிதும் கண்டுக்கொள்ளாத ரஷ்யா, தொடர்ந்து உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தீவிரவாத ஆதரிப்பு
இருப்பினும், ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க மற்றும் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு பொருள் மற்றும் ராணுவ ரீதியிலான உதவிகளை செய்து வருகிறது. போரில் உக்ரைனின் சில நகரங்களை ரஷ்யா தங்கள் நாட்டுடன் இணைத்துக் கொண்டது.
இதனால் மேலும் மோதல் தீவிரமடைந்து வருகிறது. ரஷ்ய ராணுவம் உக்ரைனில் பொதுமக்கள்,மருத்துவமனை, பள்ளிகள், குடியிருப்புகள்,மின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதையும் சர்வதேச நாடுகள் கண்டித்துள்ளன.
இந்நிலையில் தான் ஐரோப்பிய நாடாளுமன்றம் ரஷ்யாவை தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடு என பகிரங்கமாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.