உள்ளாட்சித் தேர்தலில் ஒலிப்பெருக்கி,சுவரொட்டிகள் பயன்படுத்த கட்டுப்பாடுகள் அறிவிப்பு

tamilnadu Rural local elections
By Thahir Sep 27, 2021 10:55 AM GMT
Report

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த மாநில தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

வேலூா், திருநெல்வேலி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, தென்காசி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூா் ஆகிய 9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபா் 6 மற்றும் 9-ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தோதல் நடைபெற உள்ளது.

அதேபோன்று, ஏற்கெனவே ஊரக உள்ளாட்சித் தோதல் நடைபெற்ற 28 மாவட்டங்களில் காலியாக உள்ள இடங்களுக்கான தோதல் அக்டோபா் 9-ஆம் தேதி நடைபெற உள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில்  ஒலிப்பெருக்கி,சுவரொட்டிகள்  பயன்படுத்த கட்டுப்பாடுகள் அறிவிப்பு | Rural Local Elections Tamilnadu

இந்த தேர்தலுக்கான பிரசாரத்தின் போது ஒலிபெருக்கிகள் பயன்படுத்த, சுவரொட்டிகள் ஒட்டுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற்றிடவும், தேர்தல் நடத்தை விதிகளின்படி தேர்தல் காலங்களில் ஒலிபெருக்கிகள் போன்றவற்றை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் பயன்படுத்தவும், முறைப்படுத்தவும், சுவரொட்டிகள், சின்னம், பதாகைகள், கொடிகள் ஒட்டுவது தொடர்பாகவும் பின்வரும் கட்டுப்பாடுகளை விதித்து ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.

1. தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் நடைபெறும் நாள் வரை, தேர்தல் பிரசாரங்களுக்காக எந்தவிருவகை வாகனங்களிலும் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிபெருக்கிகளை காலை 6 மணிமுதல் இரவு 10 மணிவரை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றது.

2. பொதுக்கூட்டம் அல்லது ஊர்வலங்களில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த காவல்துறை அனுமதி பெறவேண்டும்.

3. எந்த ஒரு அரசு கட்டடம் அல்லது வளாகத்திலும் சுவர் எழுத்துக்கள், சுவரொட்டிகள், கட்-அவுட்கள், விளம்பரப் பலகைகள், கொடிகள் முதலியவற்றை வைத்தல் அல்லது காட்சிப்படுத்த ஆகியவை அனுமதிக்கக்கூடாது.

4. தனியார் கட்டடங்களில் உரிமையாளர்கள் அனுமதியிருந்தாலும், சுவரில் எழுதுவதோ, சுவரொட்டி போன்றவற்றை ஒட்டுவதோ கூடாது. மேலும், விதிமுறைகளை மீறினால் அனைத்து ஒலிபெருக்கிகளும், தொடர்புடைய பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறையை மீறியமைக்கு காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.