92 வயதில் 5வது திருமணம் - நிச்சயதார்த்தம் நின்றதால் ஆழ்ந்த சோகத்தில் முதியவர்!
தொழிலதிபர் ஒருவர் தனது 5வது திருமண நிச்சயதார்த்தத்தை ரத்து செய்துள்ளார்.
5வது திருமணம்
ஆஸ்திரேலியாவை சேர்ந்த 92 வயதான புகழ்பெற்ற ஊடக அதிபர் ரூபர்ட் முர்டோக். அவரின் வால்ஸ்டீரிட்ஜர்னல், பாக்ஸ் நியூஸ் உள்ளிட்ட மற்ற நிறுவனங்களின் சொத்து மதிப்பு 20 பில்லியன் டாலர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முர்டோக் 5வது முறையாக திருமணம் செய்துகொள்கிறார். இவர்களது திருமணம் கோடை காலத்தில் நடைபெறும். இந்த தம்பதிகள் தங்கள் நேரத்தை அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய இரண்டு நாடுகளில் செலவிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்திருந்தனர்.
நிச்சயதார்த்தம் ரத்து
இந்நிலையில், தற்போது லெஸ்லி ஸ்மித் மற்றும் முர்டோம் தங்கள் நிச்சயதார்த்தத்தை ரத்து செய்துள்ளனர். மத பிரச்சினை காரணமாக இவர்கள் திருமணம் நின்றுபோனதாக கூறப்படுகிறது.
ஸ்மித் ஆழ்ந்த மத நம்பிக்கைகள் கொண்டவர். தன் மத நம்பிக்கை குறித்து வெளிப்படையாக பேசுவது அவர் வழக்கம். ஆனால், இப்படி தன் மத நம்பிக்கை குறித்து வெளிப்படையாக பேசுவது ரூபர்ட்க்கு பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.