50 ரூபாயாவது மாமூல் கொடு: ரவுடிக்கு வந்த சோதனை

india police road
By Jon Mar 02, 2021 07:10 PM GMT
Report

நகைக்கடையில் ஆயுதத்துடன் புகுந்த ரவுடி 50 ரூபாய் மாமூல் கேட்டும் கிடைக்காததால் வெறுங்கையுடன் சோகத்தில் திரும்பிய சம்பவம் நடந்துள்ளது. வேலூர் சவலன்பேட்டையைச் சேர்ந்த காலாசா என்பவர் மதுபோதையில் கத்தியுடன், நகைக்கடை உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

சிறிதும் அசைந்து கொடுக்காமல் பணம் தர நகைக்கடை உரிமையாளர் மறுக்கவே, இறங்கி வந்துள்ளார் ரவுடி காலாசா வெறும் 50 ரூபாய் தானே கேட்கிறேன் கொடு என ஒரு கட்டத்தில் ரவுடி கெஞ்சிய போதும் திட்டவட்டமாக மறுத்துவிட்டார் கடைக்காரர். பின்னர் அங்கு வந்த மற்றொரு நபர் ரவுடி காலாசாவுக்கு ஆறுதல் கூறி அங்கிருந்து அழைத்து சென்றது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இதனிடையே, தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வரும் காலாசா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதியில் உள்ள நகைக்கடை உரிமையாளர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.