10 ரூபாய் மருத்துவர் டாக்டர் சு.கோபாலன் காலமானார்!
சென்னையில் ஏழை, எளியவர்களுக்கு 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் சு.கோபாலன் நேற்றிரவு உயிரிழந்தார். சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் சு.கோபாலன் ஓய்வு பெற்றார். இவருக்கு வயது 76. டாக்டர் கோபாலன் சென்னை தண்டையாடையார்பேட்டையில் உள்ள பாலு முதலி தெருவில் வசித்து வந்தார்.
இவர் 10 ரூபாய்க்கு ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். இதனையடுத்து, மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு கட்டணமின்றி இலவசமாக மருத்துவம் பார்த்து வந்தார் கோபாலன். இவரை அப்பகுதி மக்கள் 10 ரூபாய் மருத்துவர் என்று அன்புடன் அழைத்தனர். வயதான காலத்திலும் பொதுமக்களுக்கு பல்வேறு சமூக பணிகளை செய்து வந்தார். இவருடைய சேவையை பாராட்டி பல்வேறு அமைப்புகள் டாக்டர் சு.கோபாலனுக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளன

இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட மருத்துவர் சு. கோபாலான் நேற்றிரவு உயிரிழந்தார். அவரது மறைவினால் உறவினர்களும், தண்டையார்பேட்டை பகுதி மக்களும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.