தாலி கட்டும் நேரத்தில் காதலியுடன் ஓட்டம் பிடித்த மணமகன் - கலவரமான திருமண மண்டபம்

Marriage
By Nandhini Sep 06, 2022 06:14 AM GMT
Report

திருமணத்தன்று காதலியுடன் மாப்பிள்ளை தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

காதலியுடன் மணமகன் எஸ்கேப்

திருப்போரூர், குமிழி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் குமார். இவருக்கும், மெய்யூரைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதனையடுத்து, இரு வீட்டாரும் திருமண ஏற்பாட்டை மும்முரமாக செய்து வந்தனர். நேற்று காலை திருமணம் நடைபெற இருந்த சமயத்தில், மணமேடையில் மணமகள் தயாராக இருந்தார். அப்போது, மணமகன் நீண்ட நேரமாகியும் மணமேடைக்கு வரவில்லை.

இதனால், சந்தேகமடைந்த மாப்பிள்ளை வீட்டார், மணமகன் அறைக்குச் சென்று பார்த்தனர். அங்கே மணமகன் இல்லை. இதனையடுத்து, மண்டபம் முழுவதும் மாப்பிள்ளை வீட்டார் தேடிப் பார்த்தனர். எங்கேயும் மணமகன் இல்லை. இதன் பின்னர், மணமகன் சதீஷ்குமார் காதலியுடன் தப்பி ஓடியது தெரியவந்தது.

running-groom-marriage-hall

கலவரமான திருமண மண்டபம்

இதனால் மணப்பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, சதீஷ் குமார் வேறு ஒரு பெண்ணை காதலித்து வந்ததை மாப்பிள்ளை வீட்டார் திட்டமிட்டு மறைத்து விட்டதாக காவல் நிலையத்தில் பெண் வீட்டார் புகார் கொடுத்தனர்.

இதற்கிடையில், 40 சவரன் தங்க நகை, ஏசி, பீரோ, கட்டில் என்று எல்லாம் வரதட்சணையாக கொடுத்த நிலையில், எங்களை ஏமாற்றி விட்டதாக மணமகள் வீட்டார் கோபம் அடைந்து மணமகன் வீட்டாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், திருமண மண்டபமே கலவரமானது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இரு வீட்டாரையும் சமாதானம் செய்து வைத்தனர்.