சபாஷ் இப்படிதான் இருக்கணும் .. நைஜீரிய அதிபருக்கு பாராட்டு தெரிவித்துள்ள டிரம்ப் ஏன் தெரியுமா?
ட்விட்டருக்கு தடை விதித்த நைஜீரியாவுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் நைஜீரிய முன்னாள் அதிபர் முகமது புஹாரியின் டுவிட்டர் கணக்கில் அவர் பதிவிட்ட பதிவொன்றை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது. இதனால் தங்களது நாட்டில் டுவிட்டர் நிறுவனம் தடை செய்யப்படுவதாக நைஜீரிய அரசு அறிவித்தது.
நைஜீரியாவின் இந்த முடிவுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
மேலும் சுதந்திரமான மற்றும் வெளிப்படையான கருத்துக்கு அனுமதியளிக்காத டுவிட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனத்தை உலக நாடுகள் தடை செய்ய வேண்டும்' எனவும் வலியுறுத்தியுள்ளார்.
ஏற்கனவே அமெரிக்க அதிபர் தேர்தலின் போது, தேர்தல் முடிவுகள் குறித்து தவறான தகவல்களை பரப்பியதற்காக, டிரம்பின் டுவிட்டர் கணக்கை, டுவிட்டர் நிறுவனம் நீக்கியது நாம் அறிந்ததே