என்னாச்சு பாக்கியலட்சுமி இனியாவுக்கு ? - ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த தகவல்
பாக்கியலட்சுமி சீரியலில் நடித்துவரும் நடிகை நேஹாவை பற்றிய வதந்திகளை கண்டு அவர் நொந்து போயுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் இனியாவாக நடிக்கும் நேகா மேனன் குழந்தை நட்சத்திரமாக சன் டிவியில் ஒளிப்பரப்பான வாணி ராணி சீரியலில் தேனு கேரக்டரில் அறிமுகமாகி அசத்தினார்.
அந்த சீரியல் முடிந்த பிறகு படிப்புக்காக நீண்ட இடைவெளி விட்ட அவர் மீண்டும் சித்தி-2 சீரியல் மூலம் கம்பேக் கொடுத்தார். இதனிடையே கொரோனா முதல் அலை வீசிய நேரத்தில் விஜய் டிவியில் பாக்கியலட்சுமி தொடரில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதில் இனியா கதாபாத்திரத்தில் பள்ளி செல்லும் மாணவியாக நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார்.
குண்டான உடல் தோற்றத்தை வைத்து சில மாதங்களுக்கு முன்பு இவரை இன்ஸ்டா போன்ற சமூகவலைத்தள பக்கங்களில் ட்ரோல் செய்வது அதிகமானது. அதேசமயம் நீண்ட வருடங்களுக்குப் பின் இவருக்கு தங்கை பிறந்த நிலையில் அந்த குழந்தையுடனான இருக்கும் போட்டோக்களை அதிகம் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக நேகாவுக்கு திருமணம் நடக்க இருப்பதாகவும், அவர் பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலக இருப்பதாகவும் பல வதந்திகள் பரவி கொண்டிருக்கிறது. இதனால் நொந்து போன நேகா, சமீபத்தில் தனது ஸ்டேட்டஸில் “பெங்களூர் போய் இருந்தது ஒரு குத்தமா நம்பாதீங்க நான் சீரியலை விட்டு விலகவில்லை தெரிவித்துள்ளார்.