அதெல்லாம் வதந்தி, நம்பாதீங்க : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம்

ADMK D. Jayakumar
By Irumporai Jan 21, 2023 04:17 AM GMT
Report

இரட்டை இலை முடக்கப்படும் என்பது வதந்தி செய்தி என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்தெரிவித்துள்ளார்.

 உரிமைக் கோரும் ஓபிஎஸ்

ஈரோட்டில் நடைபெற உள்:ள இடைத்தேர்தலில் தனது நிலைப்பாடு குறித்து ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் , அப்போது பேசிய ஓ.பி.எஸ் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட எங்களுக்கு முழு உரிமை உண்டு, 2026 வரை ஒருங்கிணைப்பாளராக செயல்பட தொண்டர்கள் என்னை தேர்ந்தெடுத்துள்ளனர்.

அதெல்லாம் வதந்தி, நம்பாதீங்க : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் | Rumor Has It Ops Jayakumar Admk

அதிமுக ஒருங்கிணைப்பாளராக நான் தொடருகிறேன். இரட்டை இலை சின்னம் கோரி ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திடுவேன் எனக் கூறியுள்ளார்.

 அதெல்லாம் வதந்தி

இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு வேட்பாளரை நிறுத்தினால் கூட இரட்டை இலை முடங்காது. இரட்டை இலை முடக்கப்படும் என்பது வதந்தி. அது எந்த வகையிலும் நடக்காது.

அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை பொதுக்குழு , நீதிமன்றம் அங்கீகரித்த நிலையில் ஏ படிவம் பி படிவத்தில் கையெழுத்திடும் உரிமை ஈபிஎஸ்க்கு மட்டுமே உள்ளதாக கூறினார்.