ராஜராஜ சோழன் குறித்த கேள்விக்கு செய்தியாளர்களிடம் கொந்தளித்த சரத்குமார் : காரணம் என்ன
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தமிழ்நாடு அரசு முற்றிலுமாக தடை செய்தால், அதில் நடிக்க மாட்டேன் என நடிகர் சரத்குமார் பேசியுள்ளார்.
சரத்குமார்
படப்படிப்பிற்காக கன்னியாகுமரி சென்றுள்ள நடிகர் சரத்குமார் அங்குள்ள ஆதிகேசவ பெருமாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் பக்தர்கள் மற்றும் ஆலயபணியாளர்களுடன் புகைப்படம் எடுத்துகொண்டார்.
இதனையடுத்து கோயில் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்ததாகவும் படத்தில் மையகதாபாத்திரமான பெரிய பழுவேட்டரையர் மக்களை சென்றடைந்தது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்
கடுப்பான சரத்குமார்
பொன்னியின் செல்வம் படத்தில் ராஜராஜ சோழன் ஹிந்து மன்னனாக காட்சிப்படுத்தப்பட்டதாக இயக்குனர் வெற்றிமாறன் பேசியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு ஆவேசமாக பதிலளித்த அவர், படத்தின் இயக்குனரிடம்தான் இந்த கேள்வியை கேட்கவேண்டும் எனவும் இது சுதந்திரநாடு, யாருக்கும் தங்கள் கருத்துக்களை பதிவுசெய்யும் உரிமை உண்டு என பேசினார்.
தடைசெய்தால் நடிக்கமாட்டேன்
மேலும், குடிபழக்கம் குடியை கெடுக்கும் என கூறிவிட்டு டாஸ்மாக் கடைகளை தடை செய்யவில்லையே, சிகரெட் பிடிப்பது கேடு விளைவிக்கும் என விளம்பரம் செய்துவிட்டு சிகரெட் விற்பனையை நிறுத்தவில்லையே, மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை தடை செய்தால், அதில் நடிப்பதும் நிறுத்தபடும். அதுபோல் ஆன்லைன் ரம்மி விளையாட்டை முற்றிலுமாக தடை செய்தால் அதில் நடிப்பதை நிறுத்திவிடுவேன் என கூறினார்.