ஆளுங்கட்சி என்றால் தேர்தல் ஆணையம் அமைதியாக இருக்குமா? சரமாரி கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம்
chennai
election
party
high court
By Jon
மத்தியில் ஆளுங்கட்சி மீது புகார் வந்தால் தேர்தல் ஆணையம் அமைதியாக போகுமா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. புதுச்சேரியில் வாக்காளர்களின் செல்போன் எண்ணை பெற்று பாஜக பரப்புரை செய்வதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வாக்காளர்களின் தனிப்பட்ட தகவல்களை பாஜக என்றஅரசியல் கட்சிக்கு எவ்வாறு கிடைத்தது?
புகார் கொடுக்கப்படும் கட்சி மத்தியில் ஆளுங்கட்சி என்றால் தேர்தல் ஆணையம் அமைதியாக இருக்குமா
என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய உயர்நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக மார்ச் 26-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.