ரூபி மனோகரன் வருகையால் ஸ்டார் தொகுதியான நாங்குநேரி !
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் டாக்டர் ரூபி மனோகரனும் ஒரு வேட்பாளராக களம் இறங்கி, தனது தொகுதியான நாங்குநேரியில் வாக்கு கேட்டு மக்களிடையே வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.
இவர் 25 வருடங்களாக காங்கிரஸ் கட்சியில் பணியாற்றி வருகிறார். இவர்தான் இப்போது அத்தொகுதியின் மனம் கவர்ந்த வேட்பாளர். இவரின் அறிமுகமும், மக்களோடு பழகும் விதமும் தங்களுக்கு பிடித்துள்ளதாக மக்கள் கூறுகிறார்கள்.

22 வருடங்களில் 1000 வீடுகளை கட்டி அத்துறையில் தனக்கென ஒரு முத்திரை பதித்த பல விருதுகளை பெற்றுள்ளார். முன்னாள் விமானப் படை அதிகாரியான டாக்டர் ரூபி மனோகரன், விமான நிலைய ஆணையத்திலும் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார். சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் விதமாக நீங்களும் பில்டர் ஆகலாம் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத் தலைவராக இருக்கும் திரு. ரூபி மனோகரன் நாங்குநேரியில் போட்டியிடுவதால் அத்தொகுதியே ஸ்டார் தொகுதியாகியுள்ளது. அவர் கண்டிப்பாக அத்தொகுதி மக்களுக்கு நல்லது செய்வார் நல்லது நடக்கும் என்று உறுதியாகியுள்ளது. மக்களுக்கு நல்லது செய்வதில் அவர் ஸ்டார் என்பதால் “ ஸ்டார் வேட்பாளர் “ என்று அழைக்கப்படுகிறார் என்பது போல அத்தொகுதி மக்கள் கூறுகிறார்கள்.
டாக்டர் ரூபி மனோகரன், நாங்குநேரி தொகுதிக்கு புதியவர் அல்ல. இதே நாங்குநேரி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றபோது, அங்கு காங்கிரஸ் வேட்பாளராக களம் கண்டவர். சமீபத்தில் தமிழகம் வந்த ராகுல் காந்தி நாங்குநேரி பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கூட்டத்தில் நின்று கொண்டிருந்த ரூபி மனோகரனை ராகுல் காந்தி தனது கையை கொடுத்து அழைத்து அவரது பிரச்சார வாகனத்தில் அமரவைத்தது, ‘ஹிட்’ வீடியோவாக சமூகவலைத்தளங்களில் வைரலானது.

தலைவர்கள் மற்றும் அனைவரின் நம்பிக்கைக்கூறிய வேட்பாளர் டாக்டர் ரூபி மனோகரன் என்பதால் அவர் வெற்றி உறுதியாகியுள்ளது. மக்கள் அவர் பக்கம் என்பதை மாற்று கட்சியினர் பேச கேட்க முடிகிறது.