விருது விழாவில் பாத்ரூமில் கதறி அழுத பிரபல பிக்பாஸ் நடிகை - ஏன் தெரியுமா?
விருது விழாவுக்கு சென்ற இடத்தில் பாத்ரூமில் கதறி அழுததாக பிரபல நடிகை ருபினா திலைக் தெரிவித்துள்ளார்.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும்m ருபினா திலைக் தனது கணவர் அபினவ் சுக்லாவுடன் சேர்ந்து பிக்பாஸ் 14வது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார்.
இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தான் நடித்த சீரியல் தான் அந்த நேரத்தில் பிரபலமாக இருந்ததாகவும், டிஆர்பியில் 5.7 ரேட்டிங் கிடைத்ததாகவும் கூறியுள்ளார். மேலும் விருது விழா சிறந்த நடிகைக்கான விருது எனக்கு தான் கிடைக்கும் என நினைத்தேன்.அதற்காக நான் முதல் வரிசையில் அமர்ந்திருந்தேன்.
வேறு பெயரை அறிவித்ததும் என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. உடனடியாக பாத்ரூமுக்கு ஓடிச்சென்று கதறி அழுதேன். இரண்டு நாட்களுக்கு பிறகு தான் விருது ஏன் கிடைக்கவில்லை என்பது தெரிய வந்தது. சீரியலில் எனக்கு சகோதரியாக நடித்த பெண்ணும், ஹீரோவும் தென்னாப்பிரிக்காவில் விக்ரம் ஃபட்னிஸ் ஃபேஷன் ஷோவில் கலந்து கொள்ளவிருந்தனர். அதனால் அந்த ஹீரோவுக்கு விருது கிடைத்தது என தெரிவிக்கப்பட்டது.
அதன்பின் இனி எந்த விருது நிகழ்ச்சிக்கும் செல்லக் கூடாது என்று முடிவு செய்தேன் என ருபினா திலைக் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.