டிரம்பின் இந்திய வருகையின் போது அரசு செய்த மொத்த செலவு எவ்வுளவு தெரியுமா?

Donald Trump Narendra Modi
1 மாதம் முன்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் இந்தியப் பயணத்தின் போது இந்திய அரசு எவ்வுளவு செலவிட்ட விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

டிரம்ப் இந்திய வருகை

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டெனால்ட் டிரம்ப் தனது மனைவி மெலானியா மகள் இவன்காவுடன் உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் 2020 ம் ஆண்டு பிப்ரவரி 24 முதல் 25 வரை இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டணர்.

டிரம்பின் இந்திய வருகையின் போது அரசு செய்த மொத்த செலவு எவ்வுளவு தெரியுமா? | Rti Reveals Donald Trumps 2020 India Visit

இந்த நிலையில் மிஷால் பதேனோ என்ற நபர் தகவலறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி அதிபர் டிரம்பின் இந்திய வருகையின் போது இந்திய அரசு செலவு செய்த மொத்த செலவு எவ்வுளவு என்று கேட்டிருந்தார்.

 ரூ 38 லட்சம் செலவு 

இந்த கேள்வியை மிஷால் ,அக்டோபர் 24 , 2020 அன்று விண்ணப்பதை தாக்குதல் செய்தார் , ஆனால் உடனே இது குறித்த தகவல் உடனே வராத காரணத்தால் மேல் முறையிடு செய்த நிலையில் தற்போது ஆர்.டி.ஐ பதில் அளித்துள்ளது.

அதன்படி, அமெரிக்க அதிபர் டிரம்பின் 36 மணி நேர இந்திய பயணத்திற்காக மொத்தமாக ரூ 38 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. அதில் டிரம்ப் குடும்பத்தின் உணவு தங்குமிடம் போக்குவரத்து செலவு உட்பட அனைத்தும் அடக்கம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.    

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.