மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயன்றால் ஆர்எஸ்எஸ்-க்கு தடை விதிக்கப்படும் - அமைச்சர் எச்சரிக்கை..!
கர்நாடகாவில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயன்றால், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சித்தராமையா அரசு தயங்காது என காங்கிரஸ் தலைவர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ளார்.
தடை விதிக்கப்படும் என அமைச்சர் எச்சரிக்கை
மாநிலத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க முயன்றால், ஆர்எஸ்எஸ் உட்பட எந்த அமைப்பையும் தடை செய்ய, புதிதாக பதவியேற்றுள்ள சித்தராமையா அரசு தயங்காது என்று சித்தபூர் சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்எல்ஏவும், அமைச்சருமான பிரியங்க் கார்கே தெரிவித்தார்.

பிரியங்க் கார்கே ட்விட்டரில், “எந்தவொரு மதம் அல்லது அமைப்பு அமைதியை சீர்குலைக்கவும், வகுப்புவாத வெறுப்பை பரப்பவும், கர்நாடகாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தவும் முயன்றால், அவற்றை சட்டப்பூர்வமாக சமாளிக்கவோ அல்லது தடை செய்யவோ எங்கள் அரசு தயங்காது.
அது ஆர்எஸ்எஸ் அல்லது வேறு எந்த அமைப்பாக இருந்தாலும் சரி" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின் போது, காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் பஜ்ரங் தளத்தை தடை செய்வதாக உறுதியளித்திருந்தது. இந்த தேர்தல் வாக்குறுதி பெரும் சர்ச்சையை கிளப்பியது.