பேரணிக்கு அனுமதிக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு - டிஜிபிக்கு ஆர்எஸ்எஸ் நோட்டீஸ்
அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்காவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் பேரணி
தமிழகம் முழுவதும் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கேட்டு ஆர்எஸ்எஸ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அணிவகுப்பு ஊர்வலத்தை சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் நடத்த வேண்டுமென உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து ஆர்எஸ்எஸ் தரப்பில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதற்கு பிப்ரவரி 12, 19, மார்ச் 5 தேதிகளை பரிந்துரை செய்து காவல்துறையிடம் விண்ணப்பிக்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
டிஜிபிக்கு நோட்டீஸ்
ஆனால், அவற்றில் முதல் இரண்டு தேதிகள் முடிந்துவிட்ட நிலையில், மார்ச் 5ஆம் தேதி அணிவகுப்பு பேரணி நடத்த அனுமதி அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.அனுமதி அளிக்காவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தந்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அதில், அரசின் அதிகாரத்திற்குள் நீதிமன்றம் தலையிட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ள