புதுச்சேரியில் இன்று ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்
புதுச்சேரியில் இன்று ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு இடங்களில் ஊர்வலம் நடைபெறஉள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம்
புதுச்சேரியில் இன்று ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி காமராஜர் சாலையில் இருந்து ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கடலூர் சாலையில் உள்ள சிங்கார வேலர் சிலை அமைந்துள்ள இடத்தில் நிறைவடைகிறது.
அதே போல் காரைக்காலில் இன்று மாலை 4 மணிக்கு புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் அணிவகுப்பு ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கடற்கரை சாலை சென்றடைந்து நிறைவுபெறுகிறது.
தமிழகத்தில் நவம்பர் 6
இந்த ஊர்வலம் நடைபெறும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 2-ஆம் தேதிக்கு பதிலாக நவம்பர் 6-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.