நடப்பது திமுக ஆட்சியா?- மோகன் பகவத் வருகையால் வெடித்த சர்ச்சை
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தின் மதுரை சுற்றுப்பயணம் குறித்த அறிக்கை ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் மதுரையில் நான்கு நாட்கள் தங்கி, சாய்பாபா கோவில் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதற்காக நாளை மாலை மதுரை விமான நிலையம் வரும் அவருக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நான்கு நாட்களும் மோகன் பகவத் செல்கின்ற சாலைகளை சீரமைக்கவும், தெரு விளக்குகளைப் பராமரிக்கவும் அனைத்து மண்டல அலுவலர்களுக்கு உத்தரவிட்டு மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும் என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் ட்விட்டரில் கேள்வி எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதேபோல் தமிழ்நாட்டில் நடப்பது திமுக ஆட்சியா? ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் ஆட்சியா? என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.