தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சரியாக உள்ளது : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
தமிழகத்தில் சட்ட ஒழுங்குசரியாக உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
ஆத்தித்தனார் பிறந்த நாள்
சி.பா ஆதித்தனாரின் 118 - வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகின்றது , அவருக்கு மரியாதை செலுத்தும்விதமாக , அரசியல் தலைவர்கள் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆத்திதனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர். தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதில் அளவற்ற மகிழ்ச்சி கொள்கிறேன் என கூறினார்.
சட்ட ஒழுங்கு சரியாக உள்ளது
இதையடுத்து பேசிய வைகோ, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அருமையாகவும், சிறப்பாகவும் வழிநடத்தப்படுகிறது. அதை சீர்குலைக்க பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது என தெரிவித்த அவர், தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் காலுன்ற நினைக்கிறார்கள். அது நடக்காது என கூறினார்.