பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை: திமுக அமைப்புச் செயலாளர் எச்சரிக்கை

Mk stalin Dmk Rs bharathi
By Petchi Avudaiappan Jul 18, 2021 11:53 AM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in அரசியல்
Report

பேனர் வைத்தால் கடும் நடவடிக்கை: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை திமுக தலைவரின் ஆணையை மீறி பேனர் வைப்போர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், எங்கள் கட்சியின் சார்பில் பேனர்கள் வைக்கமாட்டோம் என்று முதன் முதலில் உயர்நீதிமன்றத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சத்தியப் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்தார் என்பதைக் திமுகவினர் அனைவரும் அறிவீர்கள்.

அதன்பிறகு, திமுகவினர் பெரும்பாலானோர் பேனர் வைக்கும் பழக்கத்தைக் கைவிட்டனர் என்றாலும், ஒரு சிலர் இன்னும் பேனர்களை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகளைக் திமுக ஒருபோதும் அனுமதிக்காது. எனவே அனுமதியின்றி பேனர்கள் ஏதும் இனி வைக்கவே கூடாது என்று திமுகவினர் அனைவரையும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

திமுக தலைவர் அவர்களின் ஆணையை மீறுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தலைமை நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.