48 மணி நேரம் அவகாசம் ... சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நான் தயார் : ஆர்.எஸ். பாரதிக்கு சவால் விட்ட அண்ணாமலை
ஆர்.எஸ் பாரதிக்க்கு பாஜக தலைவர் அண்ணாமலை 48 மணி நேரம் கெடு வைத்து அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு பா.ஜ,க தலைவர் அண்ணாமலை கடந்த 14 ஆம் தேதி திமுக குடும்பத்தின் ஊழல் பட்டியல் என்ற வீடியோவை வெளியிட்டு தனது ரபேல் வாட்ச் பில்லையும் செய்தியாளர்களிடம் காண்பித்தார்.
ஆர்.எஸ் பாராதி அறிக்கை
இந்த நிலையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதில் அண்ணாமலை மன்னிப்பு கேட்டு 48 மணி நேரத்தில் 500 கோடி இழப்பீடாக தர வேண்டும் என்றும் DMK files என்ற தலைப்பில் சுமார் 15 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் நீங்கள் தி.மு.க கட்சிமீது பல தவறான, ஆதாரமற்ற, அவதூறான, கற்பனையான குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தீர்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

அண்ணாமலை அறிக்கை
ஆர்.எஸ்.பாரதியின் இந்த அறிக்கையை தொடர்ந்து, ஆர்.எஸ்.பாரதிக்கு 48 மணி நேரம் கேடு விதித்து அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், திமுக சொத்து பட்டியல் விவகாரத்தில் சட்ட நடவடிக்கை எதிர் கொள்ள நான் தயார். திமுகவினருக்கு கோடிக்கணக்கில் சொத்து உள்ள போது, மேலும் ரூ.500 கோடி கேட்கிறார் ஆர்.எஸ்.பாரதி. என் மீதும் பாஜக மீதும் சுமத்தப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு 48 மணி நேரத்தில் ஆர்எஸ் பாரதி விளக்கம் தர வேண்டும். ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிக்காவிட்டால் ஆர்.எஸ்.பாரதி மீது வழக்கு தொடரப்படும் என தெரிவித்துள்ளார்.
சட்ட நடவடிக்கைக்கு நான் தயார்! pic.twitter.com/T1ZHNyA9Qd
— K.Annamalai (@annamalai_k) April 17, 2023