முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்து அவதூறு - அண்ணாமலைக்கு தி.மு.க நோட்டீஸ்

bjpannamalai rsbharathi dubaiexpo2022 mkstalinannamalai
By Swetha Subash Mar 26, 2022 11:33 AM GMT
Report

முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்து அவதூறு பேசியதாக தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு தி.மு.க நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழ்நாடு அரங்கு மூலம் சர்வதேச அளவில் தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது. இந்த அரங்கை தொடங்கி வைப்பதற்காக அரசு முறை பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் துபாய் சென்றார்.

முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்து அவதூறு - அண்ணாமலைக்கு தி.மு.க நோட்டீஸ் | Rs Bharathi Seeks Apologise From Bjp Annamalai

முதலமைச்சரின் இந்தப் பயணம் குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவதூறு பரப்பியதாகவும், அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தி.மு.க. சார்பில் வக்கீல் நோட்டீஸ் இன்று அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அனுப்பியுள்ள நோட்டீசில் ,

“திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முக.ஸ்டாலின தமிழக அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் துபாய் எக்ஸ்போ 2022-ல் கலந்து கொண்டதை கொச்சைப்படுத்தியும்,

உள்நோக்கம் கற்பிற்கும் வகையிலும், விருதுநகர் மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் உங்கள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டங்களில் பேசியுள்ளீர்கள்.

முதல்வரின் துபாய் பயணம் வெளிப்படையானது மற்றும் அதன் நோக்கம் தமிழகத்திற்கு அதிக முதலீடு வாய்ப்புகளை ஈர்ப்பது.

முதல்வரின் அலுவல் சார்ந்த பயணத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக, அடிப்படை ஆதாரம் இல்லாமல் நீங்கள் பேசியிருப்பது, தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக இருக்கிறது.

இதற்காக நீங்கள் பொது வெளியில் பகிரங்கமாக தமிழக முதல்வரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதேபோல், நஷ்ட ஈடாக ரூ.100 கோடி முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.