வழக்கின் இறுதியில் செந்தில் பாலாஜி வெல்வார் - நம்பிக்கை தெரிவித்த ஆர்.எஸ்.பாரதி!

V. Senthil Balaji ADMK R. N. Ravi
By Karthick Jan 05, 2024 10:04 PM GMT
Report

செந்தில் பாலாஜி வழக்கில் ஆளுநர்களின் அதிகார துஷ்பிரயோத்தில் ஈடுபடுவதற்கு கொட்டு வைப்பதை போல் உச்ச நீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளது என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி வழக்கு

இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடருவதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இன்று நீதிபதிகள் ஆளுநருக்கு அமைச்சரை நீக்கும் அதிகாரமில்லை என்று குறிப்பிட்டு, செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்க தடையில்லை என்று தீர்ப்பளித்தனர்.

rs-barathi-says-senthil-balaji-will-win

இந்த தீர்ப்பு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அளிக்கப்பட்டுள்ள அடியாகவே திமுகவினர் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆர்.எஸ்.பாரதி கருத்து

இந்நிலையில், இந்த தீர்ப்பு குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கருத்து தெரிவித்துள்ள திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அமைச்சரை நீக்கவும், நியமிக்கவும் முதலமைச்சருக்குத்தான் அதிகாரம் உள்ளது என்று குறிப்பிட்டு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்றார்.

rs-barathi-says-senthil-balaji-will-win

பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் அதிகார துஷ்பிரயோத்தில் ஈடுபடுவதற்கு கொட்டு வைப்பதை போல் உச்ச நீதிமன்ற தீர்ப்பு அமைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், எல்லோரும் ஏற்றுக்கொண்ட ஒன்றை உச்சநீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது என்றும் இது முதல் வெற்றி என சுட்டிக்காட்டி, இறுதியில் இந்த வழக்கில் செந்தில்பாலாஜி வெற்றி பெறுவார் என தெரிவித்தார்.