ஓட்டுநர் கணக்கில் ரூ.9000 கோடி; தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி CEO எடுத்த திடீர் முடிவு!

Tamil nadu Chennai
By Jiyath Sep 29, 2023 07:46 AM GMT
Report

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி சி.இ.ஓவான கிருஷ்ணன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ரூ.9000 கோடி விவகாரம்

திண்டுக்கல் மாவட்டம் நெய்க்காரன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் சென்னை கோடம்பாக்கத்தில் வாடகை கார் ஓட்டுநராக உள்ளார். கடந்த செப்டம்பர் 9ம் தேதி ராஜ்குமாரின் வங்கிக் கணக்கிற்கு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் இருந்து ரூ.9,000 கோடி டெபாசிட் ஆனதாகக் குறுஞ்செய்தி வந்தது.

ஓட்டுநர் கணக்கில் ரூ.9000 கோடி; தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி CEO எடுத்த திடீர் முடிவு! | Rs 9000 Crores Tmb Bank Ceo Sudden Resignation

தனது கணக்கில் குறைந்த அளவிலே பணம் இருக்கும் நிலையில், ரூ.9,000 கோடி டெபாசிட் ஆனதாக வங்கியின் பெயரில் யாரோ ஏமாற்ற முயல்கிறார்கள் என அவர் நினைத்துள்ளார். இதனையடுத்து தனது வங்கிக் கணக்கில் இருந்து நண்பர் ஒருவருக்கு ரூ.21,000 அனுப்பி சோதனை செய்துள்ளார் ராஜ்குமார். அப்போது நண்பரின் வங்கிக் கணக்கிற்கு ரூ. 21,000 சென்றுள்ளது. இதனால் ரூ.9,000 கோடி பணம் தன் வங்கிக் கணக்கிற்கு வந்ததை அறிந்து குழப்பமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளார்.

ஓட்டுநர் கணக்கில் ரூ.9000 கோடி; தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி CEO எடுத்த திடீர் முடிவு! | Rs 9000 Crores Tmb Bank Ceo Sudden Resignation

ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே மீதமுள்ள பணம் அனைத்தையும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி திரும்பப் பெற்றுக் கொண்டது. இதனையடுத்து தூத்துக்குடி தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து அதிகாரி ஒருவர் ராஜ்குமாரை தொலைபேசியில் அழைத்து "ரூ.9,000 கோடி பணம் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டதாக" கூறியுள்ளார். பின்னர் சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் கிளைக்கு, வங்கி தரப்பில் இருந்தும் டிரைவர் ராஜ்குமார் தரப்பில் இருந்தும் வழக்கறிஞர்கள் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

சி.இ.ஓ ராஜினாமா

அதனையடுத்து , ரூ.9,000 கோடி ரூபாய் பணத்தில் இருந்து பரிவர்த்தனை செய்யப்பட்ட ரூ.21,000 பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டாம் எனவும், அதற்குப் பதிலாக வாகன கடன் வழங்குவதாகவும் வங்கி தரப்பில் இருந்து சமரசம் பேசி அனுப்பி வைத்ததாக டிரைவர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

ஓட்டுநர் கணக்கில் ரூ.9000 கோடி; தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி CEO எடுத்த திடீர் முடிவு! | Rs 9000 Crores Tmb Bank Ceo Sudden Resignation

இதுகுறித்து ராஜ்குமார், அந்தப் பணம் யாருடைய பணம்? எதற்காக எனது வங்கிக் கணக்கில் அனுப்பப்பட்டது? எனது வங்கிக் கணக்கை அவர்கள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்? என்று தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மீது சைபர் கிரைம் போலீஸார் மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் புகாரளித்துள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் சி.இ.ஓவான கிருஷ்ணன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் ராஜினாமா கடிதத்தில் தனிப்பட்ட காரணங்களுக்காகப் பதவி விலகுவதாக தெரிவித்துள்ளார். இன்னும் 2 ஆண்டுகள் பணிக்காலம் இருக்கும் நிலையில் கிருஷ்ணனின் ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.